கனவை பகிர்ந்து கலவி கற்ப்போம்
கனவு உலகினில் அரட்டை அடிப்போம்
கேட்க இங்கே யாரும் இல்லை
உண்மை உலகில் மற்றவர் தொல்லை
உந்தன் கண்கள் என்னை பார்க்க
எந்தன் கண்கள் உன்னை பார்க்க
சின்ன சிரிப்பு ஒன்றும் உதிக்கும்
ஆசையாய் அப்போது என்னை உதைக்கும்
ஒற்றை பாதையில் தொடாமல் நடக்க
சிறுவிரல்கள் மட்டும் தொட்டே சிவக்க
தொடாத போதுநீ என்னை பார்க்க
தொட்டு தொட்டு நானும் சிரிக்க
உண்மை உலகை நாமும் மறந்து
சிலமயில் தூரம் நாமும் கடந்து
இந்த நொடிகள் இருப்பது போல
கனவு உலகில் என்றும் வாழ
நெருக்கமாக உன் இடம் வந்தேன்
ஆசையாக ஓர் முத்தமும் தந்தேன்
பளார் என்று நீயும் அறைய
வலியில் அன்று கனவும் களைய :)
No comments:
Post a Comment