Friday, August 5, 2011

முடிந்தால் கண்டுபிடி!

ஆல மரத்தடியில் ஆளில்லா பொழுதில்
கமுக்கமாய் ஒன்று சொல்வேன் செய்வாயா
தோழி! கமுக்கமாய் ஒன்று சொல்வேன் செய்வாயா

சொன்னதும் வியந்துடுவாய் செய்ததும் மகிழ்ந்துடுவாய்
கமுக்கமாய் ஒன்று சொல்வேன் செய்வாயா
தோழி! கமுக்கமாய் ஒன்று சொல்வே செய்வாயா

கடற்கறை மணலிலே மெல்ல தவழ்ந்த
சங்கு போன்ற செவியை நீ என் இடத்தில் கொடுப்பாயே
நான் சொல்லும் செய்தியை கேப்பாயே

சொன்னது புரிந்ததென்று வியந்த உன்முகம்சொன்னது
சொன்னதை செய்திடுவாய் செய்து மகிழ்ந்திடுவாய்
மகிழ்ச்சியில் மயங்கியதும் உன்னையே மறந்திடுவாய்

இந்த படலை படித்தவர்க்கும் தெரியாது
நான் சொன்ன செய்தியும் புரியாது
இந்த பாடலிலே நான்அதை சொல்லிவிட்டேன்
முடிந்தால் கண்டுபிடி என்று விட்டுவிட்டேன் :)

No comments:

Post a Comment