அணைக்க தாய் இருந்து
என் அருகிலே இல்லையட
வழிகாட்ட தந்தை இருந்தும்
என் அருகிலே இல்லையட
வம்பிழுக்க தங்கை இருந்தும்
என் அருகிலே இல்லையட
விளையாட நண்பன் இருந்தும்
என் அருகிலே இல்லையட
உதைக்க தம்பி இருந்தும்
என் அருகிலே இல்லையட
பேச தமிழ் தெரிந்தும்
அறிந்தவர் இங்கு இல்லையட
சமைக்கும் கலை தெரிந்தும்
குறைகூற யாரும் இல்லையட
இன்பத்தை பகிர்ந்து கொண்டு
நகைக்க ஒருவர் இல்லையட
துன்பத்தில் கண் நீர்வடிய
துடைக்க தோழன் இல்லையட
பணம் பொருள் நிறைந்திருந்தும்
பகிர யாரும் இல்லையட
பணம் ஒன்றே போதுமென்று
என்னால் வாழ முடியவில்லை
இல்லறத்தில் துறவி போன்று
வாழ்ந்து எந்த பயனுமில்லை
இந்த பாடல் எழுதும்போது
வடிக்க என்கண்ணில் நீருமில்லை
No comments:
Post a Comment